English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
2009 |  2010 |  2011 |  2012 |  2013
இதயம் நொறுங்குண்டவர்களைப் பயன்படுத்தும் தேவன்!
மே 2012 (4) - சகரியா பூணன்

ரு சமயம் தாவீது சோம்பலினிமித்தம் யுத்தத்திற்கு செல்லாது வீட்டில் இருந்தபடியால், பயங்கர வீழ்ச்சியடைந்து பாவம் செய்தான். அந்தப் பாவம் அவனுடைய மீதி வாழ்க்கை முழுவதற்கும்...... காலாகாலங்களாய் தங்கிவிட்ட “அடர்ந்த கருப்பு புள்ளியாகிவிட்டது!” (2சாமுவேல் 11:1-5). இருப்பினும் இந்த தோல்வியை, தேவன் அவனை உடைப்பதற்கும்..... 51-ம் சங்கீதத்தை எழுதும் அனுபவத்திற்கும் பயன்படுத்திவிட்டார்!! தாவீது எழுதிய வேறு எந்த சங்கீதத்தைக் காட்டிலும், இந்த 51-ம் சங்கீதம் லட்சக்கணக்கான பக்தர்களை ஆசீர்வதித்து விட்டதே! ஒரு சாதாரண பாவத்தில் தாவீது வீழ்ந்திருந்தால், இத்தனை அருமையான 51-ம் சங்கீதத்தை அவன் ஒருக்காலும் எழுதியிருக்கவே முடியாது! அவனுடைய தோல்வி அத்தனை அகோரமாயும், எல்லோரும் அறியும்படியாயும் இருந்தபடியால்தான்..... அவன் முற்றிலுமாய் தாழ்த்தப்பட்டு நொறுங்குண்டவனாய் மாறினான். ஆம், அவன் தன் மீதியான ஜீவகாலமெல்லாம் “ஓர் நொறுங்குண்ட மனிதனாகவே” நிலைத்திருந்தான்!

பாருங்கள், நம் அருமை இயேசுவும் தன்னை “தாவீதின் குமாரன்” என எத்தனை மகிழ்வுடன் சொல்லிக் கொண்டார்!

நாம் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளுமாய் மாற வேண்டுமென்றால், நாம் புறப்பட்டு பாவம் செய்யவேண்டும் என நான் கூறவில்லை! நிச்சயமாய் நான் அப்படிக்கூறவில்லை! ஆனால், நீங்கள் ஏற்கனவே பயங்கர வீழ்ச்சியடைந்தவர்களாய் இருந்தால், இனி உங்களுக்கு நம்பிக்கை இல்லை என எண்ணிடத் தேவையில்லை என்றே கூறுகிறேன். ஆம், நீங்களும் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியனாய் மாறிடமுடியும்!!

நம் ஜீவியகாலமெல்லாம் ஜெயம் பெற்று வாழும்படியே தேவன் நமக்கு கிருபையைத் தர வாஞ்சிக்கிறார். ஆனால் அவர் அந்த கிருபையைத் தாழ்மையுள்ளவர்களுக்கு மட்டுமே தருகிறார். அநேக சமயங்களில், நம்மைப் பாவத்தில் வீழ அனுமத்திப்பதையே, நம்மைத் தாழ்த்துவதற்குரிய வழியாய் தேவன் காண்கிறார். இது நிச்சயமாய் சிறந்த வழி இல்லைதான்! இயேசு ஒருபோதும் பாவத்தில் வீழ்ச்சியடையாமலே தாழ்மையுடன் இருந்தார். ஆனால் இவ்வாறு இயேசுவைப் போவவே இருப்பதற்கு பேதுருவாலும் தாவீதாலும் இன்னும் பல தேவமனிதர்களாலும் இயலவில்லை!

ஆனால், அற்புதமான காரியம் என்னவென்றால், இத்தனை மோசமாய் வீழ்ச்சியடைந்த தாவீதைக் கூட தேவன் பயன்படுத்துகிறார் என்பதேயாகும்! ஆனால், அவர்கள் தங்கள் தோல்விகளுக்காய் மனம் கசந்து அழுது மனந்திரும்பினால் அப்படியாகும்..... மற்றபடி அல்ல!!

ஆம், தாவீதுக்கு தேவன் என்ன செய்தாரோ, அதையே உங்களுக்கும் அவர் செய்திடுவார்!

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்     அச்சு வடிவம்    மின்அஞ்சல் அனுப்புக

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com
பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)