English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
2009 |  2010 |  2011 |  2012 |  2013
‘அனுதின சிலுவை இல்லாமல்,’ கிறிஸ்தவம் இல்லை!
ஏப்ரல் 2012 (2) - சகரியா பூணன்

யேசுகிறிஸ்து பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டே பிதாவுக்கு முன்பாக வாழ்ந்து, ஊழியம் செய்தார் (லூக்கா 4:1,18). மனிதன் என்கிற நிலையில், தன் ஆவியின் ஏழ்மையை இயேசு உணர்ந்திருந்தபடியால், பரிசுத்தாவியில் நிறைந்த ஜீவியம் அவருக்கு சாத்தியமானது!

மாம்சத்தின் பெலவீனத்தை இயேசுகிறிஸ்து உணர்ந்திருந்ததுபோல, ஒரு மானிடனும் உணராததினால், எந்த மானிடனும் தேடாத அளவிற்கு அவர் பிதாவின் சமூகத்தை ‘வல்லமைக்காக’ தேடி ஜெபித்தார்!

தேவனுடைய ஊழியம் மனுஷ சாதுரியத்தினாலோ, திறமையினாலோ செய்யப்படுவதல்ல! மனந்திரும்பிய பிறகு, இயற்கையாகவே வரம்பெற்ற மனிதர்கள் தங்கள் சுபாவமான புத்தியினாலும், உணர்ச்சிவசத்தினாலும் ஜனங்களைத் தேவனிடம் திருப்ப முடியும் என்று நம்பி, தங்களின் திறமைகளை ஊழியத்தில் பயன்படுத்துகிறார்கள்.

அநேக கிறிஸ்தவ ஊழியர்கள், தங்களுடைய பேச்சுத் திறனையும், புத்திக் கூர்மையையும், தெளிந்த வசனிப்பையும் கண்டு.... அதை, ஆவியானவரின் வல்லமை என்று தவறாய் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இவையாவும் ஆத்துமாவின் வல்லமைதான்!

அவைகளைச் சார்ந்து கொள்வதால், தேவனுடைய ஊழியத்திற்கு தடைதான் ஏற்படும்! மனுஷீக ஆத்தும பெலத்தால் செய்யப்படும் கிரியை எதுவும் நித்தியமானதல்ல. காலப்போக்கில் அது அழியாவிட்டாலும், கிறிஸ்துவின் நியாயாசனத்தில் அது நிச்சயமாய் அழிந்து போகும்.

இயேசு, தன் சுய பேச்சுத்திறனையோ, உணர்ச்சிப் பெருக்கத்தையோ சார்ந்து கொண்டு ஜனங்களை தேவனிடத்திற்குத் திருப்பவில்லை. ஆத்தும பெலத்தினால் செய்கிற எந்த கிரியையும், கேட்கிறவர்களின் “ஆத்துமாவை மாத்திரம்தான்” தொடும். அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கோ, அவைகள் உதவாது என்று இயேசு அறிந்திருந்தார்.

அதே காரணத்தால்தான் அவர் எந்தவிதமான “இசை நிகழ்ச்சியின் மூலமாகவும்” ஜனங்களை தேவனிடத்திற்குத் திருப்ப முயற்சிக்கவில்லை!

தன்னை கேட்பதற்கு கூடினவர்களின் உணர்ச்சியை கிளப்பிவிட்டு, தேவனிடத்தில் சரணடையும்படி மனுஷீகமாய் அவர்களை உந்தி முயற்சிக்கவில்லை. இன்றைய சுவிசேஷகர்கள் கையாளும் மற்ற எந்த ஆத்தும மனுஷீக உபாயங்களையும் அவர் கையாளவில்லை. இவை களெல்லாம் அரசியல்வாதிகளும் விளம்பரதாரர்களும் கையாளுகின்ற உத்திகள்! அவரோ, அவர்களில் ஒருவரல்ல! யெகோவாவின் ஊழியக்காரரான அவர், தன் எல்லா பிரயாசத்திற்கும் பரிசுத்த ஆவியானவரையே முற்றிலும் சார்ந்திருந்தார். அதன் விளைவாகவே, அவரைப் பின்பற்றினவர்கள் அனைவரும், அவரைப்போலவே தேவனுடைய ஆழ்ந்த ஜீவியத்திற்குள் பிரவேசித்தார்கள்!!

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்     அச்சு வடிவம்    மின்அஞ்சல் அனுப்புக

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com
பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)