English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
வாரத்தில் ஓர் முத்து!
08 ஜீன் 2010 - சகரியா பூணன்
"நேர்மை கொண்டவர்களே" சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள்!

"நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால்...... சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:31,32) என்றே இயேசு பறைசாற்றினார்!

நம் ஜீவியத்தில் உண்டாயிருக்கும் எந்த ஒரு அடிமைத்தன கட்டுகளும், 'நாம் சத்தியத்தை அறியாததினால் உண்டானதேயாகும்! அதற்கு காரணம் 1) நாம் சத்தியத்தைக் குறித்து கேள்விப்படாமலே இருந்திருக்கலாம், அல்லது 2) சத்தியத்தைக் கருத்தாய் நோக்கிட தவறியிருக்கலாம், அல்லது 3) சத்தியத்தை கேட்டிருந்தாலும், அதைத் தவறாய் புரிந்து கொண்டிருக்கலாம்!! இவ்விதமாய் நாம் சத்தியத்தை அறியாததினாலேயே, எல்லாவித ஆக்கினை உணர்வுகள் (குற்ற மனப்பான்மைகள்) நம்மைத் தாக்குகிறது.

"நாம் எங்கே முடிவுபரியந்தம் நிலைநிற்கப் போகிறோம்!" என்ற எண்ணமே, இன்று அனேகரை இயேசுவின் சீஷர்களாய் மாறவிடாதபடி தயங்கித் தேங்க வைத்துவிட்டது! "நான் இயேசுவின் சீஷன்!" என ஜனங்களிடம் பகிரங்கமாய் அறிக்கை செய்தபின்பு ஏதாகிலும் பாவத்தில் வீழ்ந்து விட்டால், ஜனங்கள் தங்களைப் பரிகசிப்பார்கள்...... அதற்குபின்பு, "ஏன்தான் இப்படி பகிரங்கமாய் அறிக்கை செய்தேனோ!" என மனம் வருந்த வேண்டியதாகிவிடும், என்றெல்லாம்கூட எண்ணுகிறார்கள். இவ்வாறாகவே, தங்கள் ஜீவியத்தில் இயேசுவின் சீஷர்களாய் மாறிவிடாதபடி சாத்தான் இவர்களை வசப்படுத்திக்கொள்கிறான்!!

ஆனால், உண்மையாதெனில் நம்மில் ஒருவராகிலும் பூரணமானவர்கள் அல்ல! "நான் எல்லா நேரங்களிலும் இயேசு நடந்தது போலவே நடக்கிறேன்" என இப்பூமியில் உள்ள ஒருவராகிலும்கூட சொல்லிவிட முடியாது! "இயேசு நடந்தது போலவே நாமும் நடக்க வேண்டும்" ( 1யோவான் 2:6 ) என்பது உண்மைதான். இருப்பினும், ஏதாவது ஒரு சில நேரங்களில் நாம் எல்லோருமே தடுமாறத்தான் செய்கிறோம்! எருசலேம் சபையில் பிரதான மூப்பனாகிய யாக்கோபு கூட, தானும் சில சமயங்களில் தடுமாறியதாகக் கூறினார்! ஆகவேதான் "நாம் எல்லோரும் (we All)...... தவறுகிறோம்" என தன்னையும் சேர்த்து குறிப்பிட்டார் (யாக்கோபு 3:2). ஆனால் அவ்வாறு தடுமாறி வீழ்ந்திடும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? 'உடனே குதித்தெழுந்து தொடர்ச்சியாக உங்கள் ஓட்டத்தை ஓடுங்கள், அவ்வளவுதான்!

'வேதியல் பாடத்தில் (Chemistry) "பெயில்" ஆனபடியால், யாராகிலும் பள்ளிக்கூடத்தை விட்டே விலகிவிடுவார்களா? இல்லை! அதற்கு மாறாக, "ஸ்பெஷல் டியூசனில்" பயின்று, அடுத்த தேர்வில் "பாஸ்" செய்யவே முயற்சிப்பார்கள்!!

ஆம், தேவன் தன் பரலோகத்தின் பெருக்கத்தை "பூரணமான ஜனங்களை வைத்து அல்ல" நேர்மையான ஜனங்களை வைத்தே பெருக்குகிறார்.

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

அச்சு வடிவம்     மின்அஞ்சல் அனுப்புக

பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)